சென்னை:
தனுஷ் பாராட்டியது எதற்காக ஆர்வ கோளாறுகளால் அல்லோகலப்பட்டது சமூக வலைதளங்கள் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.
கோலிவுட்டையே அதிர்ச்சியாக்கியது சௌந்தர்யாவின் விவாகரத்து விஷயம். இதை தன் டுவிட்டர் பக்கத்தில் அவரே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
இதை தொடர்ந்து தனுஷ், சௌந்தர்யாவிற்கு வாழ்த்து தெரிவிக்க பற்றிக் கொண்டது சமூக வலைதளங்கள்... விவாகரத்து செய்வதற்கு பாராட்டு சொல்கிறாரே தனுஷ் என்று பல ஆர்வகோளாறுகள் விஷயம் என்னவென்று தெரியாமல் டென்ஷனாகி உள்ளனர்.
ஆனால் அவர் டைவேர்ஸ் மேட்டருக்கு வாழ்த்துக்கள் சொல்லலை... சௌந்தர்யாவை பீட்டா அமைப்பு விளம்பர தூதராக நியமித்ததற்குதான் வாழ்த்து சொல்லியுள்ளார். எது எப்படியோ சமூக வலைத்தளத்தில் கொஞ்சம் கவனம் வேண்டாமா? காரணத்தை கூறாமல் வாழ்த்து சொன்னால் இப்படித்தான் நடக்கும் என்று சொல்கின்றனர் நடுநிலையாளர்கள்.