சென்னை:
எவ்வளவு சொல்லியும் கேட்கலையே... உள்ளத்தில் போட்டு மருகும் சூப்பர் ஸ்டார் என்று வதந்தி வசந்தாக்கா உண்மையை போட்டு உடைத்துள்ளார்.
தன் மகளின் 6 ஆண்டு திருமண பந்தம் முடிவுக்கு வந்து விவாகரத்திற்காக காத்திருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினியை வெகுவாக பதம் பார்த்துள்ளதாம்.
மற்றவர்களுக்கே பெரும் அதிர்ச்சியாக இருக்கும் போது பெற்ற தந்தைக்கு எப்படி இருக்கும். பாசக்கார தந்தையான ரஜினி பலவிதத்திலும் அட்வைஸ் செய்தும் சௌந்தர்யா தன் நிலைபாட்டில் இருந்து மாறவே இல்லியாம்.
தன் நண்பர்கள், உறவினர்கள் மூலம் எத்தனையோ முறை பேசி பார்த்தும் சௌந்தர்யா கொஞ்சம் கூட மனம் மாறாதது ரஜினிக்கு மன வருத்தத்தை அளித்துள்ளதாம். தோளுக்கு மேல் வளர்ந்த பெண்ணை எப்படி கண்டிப்பது என்று தெரியாமல் தன்னை தானே வருத்தி கொள்கிறாராம்.