மும்பை:
டாப்... டாப்... டாப்ஸி என்று பாலிவுட் வாலாக்கள் பாராட்டித் தள்ளுகின்றனர். இப்படி பாராட்டு ஒரு பக்கம் கிடைக்கும் போது படமும் வசூலில் அள்ளுவதால் மகிழ்ச்சியோ... மகிழ்ச்சியாக இருக்கிறார் வெள்ளாவி நடிகை டாப்ஸி.
அனிருத்தா சௌத்ரி இயக்கத்தில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடித்த படம் பிங்க். இந்த படம் கடந்த 16ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தை பார்த்தவர்கள் டாப்ஸியின் நடிப்பை பாராட்டி தள்ளுகின்றனர்.
தோடு வசூலிலும் படம் சக்கை போடு போட்டு வருகிறது. முதல் நாள் ரூ. 4.32 கோடியும், இரண்டாவது நாள் ரூ. 7.65 கோடியும், மூன்றாவது நாள் ரூ. 9.54 கோடியும் இந்தியாவில் வசூலித்துள்ளது. இதனால் இரட்டை மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார் டாப்ஸி.