சொன்னேன்... வலியை மறைத்து நடித்தார்... வில்லன் பெருமிதம்

frame சொன்னேன்... வலியை மறைத்து நடித்தார்... வில்லன் பெருமிதம்

Sekar Tamil
சென்னை:
சொன்னேன்... செய்தார்... நடிப்பில் அடுத்த கட்டம் போவார் என்று மனம் நெகிழ்ந்து சொல்லியுள்ளார் வில்லன் நடிகர்.


என்ன விஷயம் தெரியுங்களா? கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தொடரி, பைரவா என்று 2 படங்கள் ரிலீசுக்கு செம ஹாட்டாக தயாராகி நிற்கிறது. இதில் தொடரி படம் வரும் 22ம் தேதி பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகிறது. 

Image result for harish uthaman in thodari

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படத்தில் வில்லனாக ஹரிஷ் உத்தமன் நடித்துள்ளார். இவர் கீர்த்தி சுரேஷ் பற்றி சொன்ன விஷயம் தான் தற்போது டாக் ஆப் கோலிவுட் ஆகி உள்ளது. என்ன சொல்லியிருக்காருன்னா? படத்தில் கீர்த்தி சுரேஷின் தலைமுடியை பிடித்து இழுக்கும் ஒரு காட்சி இருந்தது. அந்த காட்சி கண்டிப்பாக கீர்த்தி சுரேசுக்கு வலியை தரும் என்று தெரியும்.


நான் கீர்த்தி சுரேஷிடம், கண்டிப்பாக உங்களுக்கு வலிக்கும் என்னை மன்னித்துவிடுங்கள் என்று சொன்னேன். ஆனால் கீர்த்தி நாம் காட்சியை நன்றாக எடுத்து முடிப்போம் என்று கூறினார். அந்த காட்சியில் கண்டிப்பாக மிகுந்த வலியை கீர்த்தி சுரேஷ் மறைத்துக் கொண்டு நடித்தார் என்று சொல்லியுள்ளார். அப்ப அடுத்த கட்டத்திற்கு உயர்கிறார் கீர்த்தி சுரேஷ் என்று கோலிவுட் வாசிகள் பெருமிதப்படுகின்றனர்.


Find Out More:

Related Articles: