மகிழ்ச்சி... மகிழ்ச்சி... ஆஸ்காருக்கு செல்கிறது விசாரணை

frame மகிழ்ச்சி... மகிழ்ச்சி... ஆஸ்காருக்கு செல்கிறது விசாரணை

Sekar Tamil
சென்னை:
ஆஸ்கார்... ஆஸ்கார்... இந்த ஆசை இசைப்புயலால் நிறைவேறினாலும்...நம் தமிழ் படத்திற்கு கிடைத்தால்... இப்போது அது வெற்றிமாறனால் கிடைக்குமா? ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.


ஒரு பெருமிதமான செய்தியை சொல்லியிருக்காங்க... கோலிவுட் கோகிலாக்கா... என்ன தெரியுங்களா? வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விசாரணை திரைப்படம் விமர்சகர்கள் மட்டுமின்றி அனைவரின் மனதையும் கவர்ந்தது. இப்போது மேலும் ஒரு பெருமையாக இந்த படம் ஆஸ்கார் விருதுக்கு செல்கிறது என்பதுதான் அந்த செய்தி...


இந்த செய்தியை கேட்டு அனைவரும் வெற்றிமாறனுக்கு, தனுஷ்க்கும் வாழ்த்துக்கள் சொல்லியபடியே உள்ளனர். ஆனால் இந்த படத்தின் எடிட்டர் கிஷோர் மரணம் வெற்றிமாறனுக்கு பெரிய இழப்புதான். காரணம் வெற்றிமாறனின் நெருங்கிய நண்பர் அவர். 


இப்படத்தின் முதல் டைட்டில் கார்டிலே கிஷோருக்கு இப்படம் சமர்ப்பணம் என்று போட்டிருந்தார் வெற்றி... இந்நிலையில் இந்த படம் ஆஸ்காருக்கு செல்லும் நிலையில் கிஷோரை நினைத்து வெற்றிமாறன் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறாராம்.



Find Out More:

Related Articles:

Unable to Load More