சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில், ரிலீசான 'கபாலி' திரைப்படம் உலகம் முழுவதும் வெளிவந்து, சூப்பர் ஹிட்டானது என்பதை நாம் அனைவரும் அறிந்தோம். இந்த படத்தின் மலேசிய ரிலீஸ் உரிமையை பெற்ற மாலிக் ஸ்டிரீம்ஸ் நிறுவனம், பெரிதளவில் லாபம் சம்பாதித்தது.
இதனை தொடர்ந்து கபாலியை அடுத்து இந்த நிறுவனம் சூர்யாவின் 'எஸ்-3' திரைப்படத்தின், மலேசிய ரிலீஸ் உரிமைகளை பெருந்தொகைக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
ஹரி இயக்கத்தில், சூர்யா நடித்து வரும் 'எஸ்-3' திரைப்படத்தில் அனுஸ்கா, ஸ்ருதி ஹாசன், சூரி, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
வரும் டிசம்பர் 16-ந்தேதி, இப்படம் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.