ஜேம்ஸ் வசந்தன் திரைப்படத்தில் இணைந்த நான்கு பிரபல நடிகைகள்

Sekar Tamil
தொலைக்காட்சி தொகுப்பாளரும், இசையமைப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன், கடந்த ஆண்டு 'வானவில் வாழ்க்கை' என்ற திரைப்படத்தை இயக்கி, இயக்குனராக அறிமுகமானார். 


இதையடுத்து தற்போது அவர் ஒரு புது படத்தை இயக்க முன்வந்துள்ளார். பெண்களின் பிணைப்பை வெளிகாட்டும் வகையில், இந்த புது படம் உருவாகவுள்ளது. இதில் நான்கு பிரபல நடிகைகள் நடிக்க உள்ளனர். 


அவர்கள் யார் தெரியுமா?.... 80-லும், 90-லும் முன்னணி நடிகைகளாக வலம் வந்த குஷ்பு, சுஹாசினி, ராதிகா மற்றும் ஊர்வசி தான் இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்க உள்ளனர். இவர்களுக்கு ஜோடியாக 4 முன்னால் ஹீரோக்கள் நடிக்க உள்ளனர். இதன் படப்பிடிப்பு அடுத்த வாரம் ஆஸ்திரிலேயாவில் தொடங்கவுள்ளது. 


மேலும் இதுகுறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.



Find Out More:

Related Articles: