வித்தியாசமான தோற்றத்தில் ஷ்ரேயா

Sekar Tamil
தமிழ் சினிமாவில் நம்பர் 1 நடிகையாக வலம் வந்த ஷ்ரேயாவிற்கு, அண்மை காலங்களில் படவாய்ப்புகளே இல்லாமல் போனது. சில படங்களில் சிறப்பு தோற்றத்தில் மட்டுமே நடித்து வந்தார்.இந்நிலையில் அவருக்கு  தற்போது வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கும் வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது. 


தெலுங்குவில் உருவாகி வரும் 'கவுதமிபுத்ரா சதகர்னி' திரைப்படத்தில் ஷ்ரேயா, வஷ்ஸ்த்தி தேவியாக நடித்து வருகிறார். சரித்திர கதையை கொண்டு உருவாகும் இந்த படத்தில் நந்தமூரி பாலகிருஷ்ணா ஹீரோவாக நடிக்கிறார். நடிகை ஹேமா மாலினி, கவுதமியாக நடிக்கிறார்.


வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் ஸ்ரேயாவிற்கு இந்த    படம் அவருக்கு சினிமாவில் நல்ல எதிர்காலத்தை பெற்று கொடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Find Out More:

Related Articles: