'இது நம்ம ஆளு' திரைப்படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் விரைவில் வெளிவர உள்ளது.
இதையடுத்து சிம்பு , ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் மூன்று வேடத்தில் நடித்து வருகிறார்.
அண்மையில் இதன் முதற்கட்ட பாப்பிடிப்பு நிறைவடைந்தது. அதில் சிம்பு மற்றும் ஸ்ரேயா நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. இதையடுத்து இன்று இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
இதில் சிம்பு 60 வயது மதிக்கத்தக்க, தாதா அஸ்வினாக நடிக்கிறார். இதற்காக அவர் தனது உடல் எடையை 90 கிலோ வரை அதிகரித்துள்ளார். மேலும் இந்த படப்பிடிப்பில் சிம்பு உடன் இனைந்து தம்மன்னாவும் நடிக்கவுள்ளார்.
தந்தைக்கும், இரட்டை மகன்களுக்கும் இடையே நடக்கும் சம்பவங்களை கொண்டு இப்படம் படமாக்கப்படுகின்றன.