அவருக்காக... இவர் விட்டு கொடுக்க போகிறார்... போகிறார்...

Sekar Tamil
சென்னை:
அவருக்காக... இவர் விட்டு கொடுத்து போக போகிறாராம்... இது எப்படி இருக்கு என்று கோலிவுட் கோகுல் தகவல் சொல்லியிருக்கார். விஷயம் என்னன்னா?


தற்போது தமிழ் சினிமாவில் போட்டி நடிகர்களாக விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயனை சொல்லிக்கிட்டு வர்றாங்க... ஆனால் எங்களுக்குள் எந் போட்டியும் இல்லை என்று விஜய் சேதுபதி றெக்க டிரைலரில் சிவகார்த்திகேயனின் மான் கராத்தே பட போஸ்சை செய்து காட்டி தங்களின் நட்பை வெளிப்படுத்தினார். 


இப்போ... சிவகார்த்தி நடித்த ரெமோ படம் வரும் அக்.7ம் தேதி வெளியாக இருக்கிறது. அதே நாளில் விஜய் சேதுபதியின் றெக்க படமும் வெளியாக இருக்கிறதாம். இந்நிலையில் தயாரிப்பாளரிடம் றெக்க படத்தை வேறொரு நாளில் ரிலீஸ் செய்ய பேசி வருகிறாராம் விஜய் சேதுபதி... எம்புட்டு நல்ல மனசுக்காரர்.


Find Out More:

Related Articles: