'விஜய் 62' படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் யார் தெரியுமா?

frame 'விஜய் 62' படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் யார் தெரியுமா?

Sekar Tamil
இளையதளபதி விஜய் நடிப்பில் தற்போது 'பைரவா' திரைப்படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ள நிலையில், வரும் 2017-ம் ஆண்டு பொங்கல் அன்று இப்படம் பிரம்மாண்டமாக வெளிவர உள்ளது. 


இதையடுத்து 'தெறி' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில், அட்லீ இயக்கத்தில் விஜய் தனது 61-வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்கவுள்ளது ஆகியவற்றை நாம் ஏற்கனவே அறிந்தோம். 


இந்நிலையில், விஜய் நடிக்கவுள்ள 62-வது திரைப்படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் குறித்த செய்திகள் வெளிவந்துள்ளது. இயக்குனர் செல்வராகவன், விஜய்யின் 62-வது திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை நடிகர் பிரபு, 'சிவாஜி' புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


எனினும் இதுகுறித்த அதிகார பூர்வ தகவல்கள் வெளிவரும் வரை நாம் காத்திருக்க வேண்டியுள்ளது.


Find Out More:

Related Articles:

Unable to Load More