'பாஹுபலி 2' டீசர் ரிலீஸ் தேதி இதோ...

Sekar Tamil
ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்து மெகா ஹிட்டான 'பாஹுபலி' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதில் முந்தய பாகத்தில் நடித்த அனுஷ்கா, பிரபாஸ், தமன்னா, ராணா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 


இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வரும் அக்டோபர் 23-ந்தேதி, இந்த படத்தின் டீசரை, படக்குழுவினர் வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது. 


ஹீரோ பிரபாஸின் பிறந்தநாள் அக்டோபர் 23-ந்தேதி என்பதால், அன்றைய தினம் இந்த டீசரை வெளியிட படதரப்பு முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. 


எனினும் இந்த தகவல் முறையாக வெளிவரும் வரை, நாம் அமைதியாக இருப்போம்.


Find Out More:

Related Articles: