சென்னை:
ஜோடியா... இல்ல அக்காவா? குழம்பி போய் உள்ளது கோலிவுட் என்று கோகிலாக்கா தகவல் சொல்லியிருக்காங்க.
என்ன விஷயம் என்றால்... நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 நாயகி என்றால் யாராது மறுப்பு சொல்ல முடியுமா? இவர் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த இருமுகன் 100 கோடி ரூபாய் வசூலித்ததும் குறிப்பிடத்தக்கது.
இவர் நடிப்பில் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளன. இதில் இதில் இமைக்கா நொடிகள் என்ற படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஹீரோ அதர்வா. சரி இதில் என்ன குழப்பம் என்கிறீர்களா? அதர்வாவிற்கு நயன்தாரா ஜோடியாக நடிக்கிறாரா? இல்ல அக்காவா நடிக்கிறாரா என்பதுதான் குழப்பமே? படக்குழுதான் தீர்த்து வைக்க வேண்டும்.