என் மாப்ள சால்ட் அண்ட் பெப்பரில் அழகோ... அழகு..: ராதாரவி

frame என் மாப்ள சால்ட் அண்ட் பெப்பரில் அழகோ... அழகு..: ராதாரவி

Sekar Tamil
சென்னை:
அவங்களுக்கு அப்புறம்... அழகு என்றால் என் மாப்ள என்று பாராட்டு சான்றிதழ் வாசித்துள்ளார் இந்த நடிகர்.


எந்த நடிகர் யாரை பாராட்டி இருக்காங்க தெரியுங்களா? சொல்றாங்க பாருங்க கோலிவுட் கோகிலாக்கா...


ஆர்.ஜே. மீடியா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் ஆங்கில படம். ராம்கி நடித்துள்ள இப்படத்தை புதுமுகம் குமரேஷ் குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ராம்கி சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் அட... புரியலையா... நரைச்ச முடி, தாடியுடன் வர்றதுதான். 


இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி என்ன சொன்னார் தெரியுங்களா? வெள்ளை முடி, தாடியிலும் கூட இளமையாகவும், அழகாகவும் தெரிவது ரஜினி சார் தான்.


பெரிய சூப்பர் ஸ்டார் என்ற இமேஜை கண்டுகொள்ளாமல் பொது இடங்களுக்கு வழுக்கைத் தலையுடன் வெள்ளை தாடியில் எளிமையாக வருவார். ரஜினி சாரை அடுத்து சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் அழகா இருக்கிறது அஜித்தான். இவங்களை பார்த்து அட நாமளும் இப்படி இருப்போம்ன்னு கொஞ்சநாள் வெள்ளை முடியும் உலா வர... என்னண்ணே... வயசாகிடுச்சு போலிருக்கேன்னு கேட்கிறாங்க.


இப்ப "மாப்ள" ராம்கி வெள்ளை தாடியுடன் உள்ளார். வெள்ளை தாடியிலும் இளமையாக இருக்கும் 3வது நபர் அவர் தான். அழகா இருக்கார்... என்று வழக்கம் போல் தன் அதிரடியான பேச்சால் அரங்கை அதிர செய்தார்.


Find Out More:

Related Articles:

Unable to Load More