உதயநிதியோடு இணைந்த பிரபல வில்லன்கள்

Sekar Tamil
உதயநிதி ஸ்டாலின் தற்போது ''தூங்காநகரம்' இயக்குனர் கவுரவ் நாராயணன் இயக்கும் புது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இதில் உதயநிதிக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடிக்கிறார். 


இதன் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கப்பட்டு, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இந்த படத்தில் உதயநிதிக்கு வில்லனாக இரு நடிகர்கள் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 


அவர்கள் யார் தெரியுமா?... தெரியாதா.... வேறு யாருமில்லை நம்ம டானியல் பாலாஜி மற்றும் ஆர்.கே.சுரேஷ் தான். இவர்கள் இருவரும் தான், இந்த படத்தில் வில்லனாக நடிக்க உள்ளனர். 


மேலும் 'மருது', 'தாரை தப்பட்டை' உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்த ஆர்.கே.சுரேஷ் தற்போது உதயநிதி ஸ்டாலினுக்கு முதன்முறையாக வில்லனாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Find Out More:

Related Articles: