கேரளாவை சேர்ந்த அமலாபாலுக்கும் இயக்குனர் விஜய்க்கும் 2014 இல் திருமணம் நடைபெற்றது. ஆரம்பத்தில் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர் ஆனால் சில மாதங்களிலே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
திருமணத்திற்கு பின்பும் அமலாபால் திரைப்படத்தில் நடித்ததால் விஜயின் குடும்பத்தில் இருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்று ஊடகங்களில் வெளிவந்தது.
அதன் பின்னர் இருவரும் சுமூகமாக பிரிய முடிவு செய்தனர், எனவே இருவரும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை குடும்பநல கோர்ட்டில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது இருவரும் பிரிவதில் உறுதியாய் இருந்ததால் குடும்பநல நீதிமன்றம் இருவருக்கும் தீர்ப்பு அளித்தது அதனை தொடர்ந்து இருவரும் சட்டப்படி பிரிந்தனர்.