இன்றைய காலகட்டத்தில் தமிழ்நாட்டில் நடிகர் நடிகைகளுக்கு கொடுக்கப்படுகிற மரியாதை, பல அரசியல் தலைவர்களை இன்றளவும் ஆட்டம் கொள்ள வைக்கும் அதிசயங்களில் ஒன்று. சி.ஆர்.சரஸ்வதியில் ஆரம்பித்து, பிரச்சாரத்திற்காக விழுந்து விழுந்து தமிழ்கற்றுக் கொள்ளும் நமீதா வரைக்கும் பலருக்கும் தமிழக அரசியல் வா வா என்று வரவேற்பு கொடுத்துக் கொண்டேயிருக்கிறது.
இந்த நேரத்தில் சசிகலா அணி வேட்பாளர் தினகரனுக்கு அதிக கூட்டம் சேர்வதில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் பன்னீர் அணிக்கு பயங்கர வரவேற்பாம் . அவரை காணவும் கை குலுக்கவும் தொண்டர்கள் கடும் ஆர்வம் காட்டுகிறார்களாம். இதை ஒரேயடியாக அடித்து உடைத்து சசிகலா அணிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றால், சினிமா நடிகையை இறக்கினால் தான் உண்டு . அந்த வகையில் பலவாறாகவும் யோசித்த வேட்பாளர் தினகரனின் தளபதிகள், மதராசப்பட்டினம், ஐ, எந்திரன் பார்ட் 2 புகழ் எமி ஜாக்சனிடம் பேசினார்கள். பெரும் தொகை ஒன்றை தருவதாகவும் கூறியதால், அந்த இங்கிலாந்து கிளி மெனக்கெட்டு இந்தியா வந்து ஆர்.கே நகரில் பிரச்சாரம் செய்ய தயாராகிவிட்டது.
எந்திரன் 2 வெளியாகிற வரைக்கும் அப்படத்தின் இமேஜை குலைப்பது போல எந்த விஷயத்திலும் ஈடுபடாதே என்று பலமுறை வலியுறுத்தியும் எமி கேட்பதாக இல்லை. இதனால் எமி ஜாக்சன் மேல் மிகுந்த எரிச்சலுடன் இருக்கிறாராம் இயக்குனர் ஷங்கர்.