ரஜினியும் ராஜமௌலியும்  எப்பொழுது இணைவார்கள்!!

frame ரஜினியும் ராஜமௌலியும் எப்பொழுது இணைவார்கள்!!

SIBY HERALD



பாகுபலி படத்தின் முதல் பாகம் வெளியானபோதே, இந்தப் படம் முடிந்ததும் ரஜினியுடன்தான் அடுத்த படம் ராஜமௌலி செய்வார் என்று பேச்சுகள் கிளம்பின. அதற்கு மேலும் வலு சேர்ப்பதுபோல, 'ராஜமௌலி இயக்கத்தில் நடிக்க எப்போதும் தயார்' என ரஜினியும், 'நான் தமிழில் நேரடியாகப் படம் இயக்கினால், அது ரஜினிகாந்த் நடிக்கும் படமாகத்தான் இருக்கும்' என்று ராஜமௌலியும் பொது நிகழ்ச்சிகளில் கூறியிருந்தனர்.
Image result for rajini and rajamouli



இப்போது பாகுபலி 2 வெளியானதும், மீண்டும் ரஜினி - ராஜமௌலி படம் குறித்த பேச்சுகள் விரியமாக கிளம்பியுள்ளன. இந்த முறை இருவரும் இணையும் படத்தின் அறிவிப்பு அனைவரையும் எதிர்ப்பார்க்க வைத்திருக்கிறது.
Image result for rajini and rajamouli



ரஜினிக்குப் பொருத்தமான கதை ஒன்றைத் தயார் செய்யப் போவதாக ஏற்கெனவே ராஜமௌலியின் தந்தையும் பாகுபலியின் கதாசிரியருமான விஜயேந்திர பிரசாத் ஏற்கனவே கூறியிருந்தார்.


இப்போது அந்தக் கதை விவாதம் நடைபெறுவதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வரலாம் என்றும் எதிர்ப்பார்க்கபடுகிறது. இந்த அறிவிப்பு மட்டும் வெளியானால் உலக சினிமாவே அதிரும் என்பதில் மாற்றுக் கருத்திருக்காது!


Find Out More:

Related Articles: