போதை பொருள் விசாரணை: நடிகை சார்மி கடும் எதிர்ப்பு

J Ancie


ஐதராபாத்: போதை பொருள் விவகாரம் தொடர்பாக,தற்போது  சிறப்பு புலனாய்வு குழு முன் ஆஜராக மறுத்துள்ள பிரபல தெலுங்கு நடிகை சார்மி, இது தொடர்பாக ஆந்திர உயர்நீதிமன்றத்திலும் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார்.

12 பேருக்கு சம்மன்
தெலுங்கு திரையுலகில், போதை பொருள் சப்ளை உச்சக்கட்டத்தில்  கொடி கட்டி பறக்கிறது. சமீபத்தில் போதை பொருள் சப்ளையின் முக்கிய புள்ளியை வலைக்கட்டி  ஆந்திர போலீசார் கைது செய்தனர். அதன் பிறகு தெலுங்கு திரைப்பட நடிகர், நடிகையர், 12 பேருக்கு வரிசையாக சம்மன் அனுப்பி உள்ளனர். இதுவரை, ஐந்து பேரிடம் விசாரணை முடிக்கப்பட்டுள்ளது.நேற்று (ஜூலை, 24) நடிகர் நவ்தீப்பிடம் விசாரணை நடத்தப்பட்டது. நடிகை சார்மி, கடந்த 21ம் தேதியே சிறப்பு புலனாய்வு குழு முன் சம்மன்படி ஆஜராகி இருக்க வேண்டும். அதை சார்மி தவற விட்டதால், வரும் 26ம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.





ஐகோர்ட்டில் மனு தாக்கல்
இந்த சூழ்நிலையில், ஆந்திர உயர்நீதிமன்றத்தில் நடிகை சார்மி ஒரு புதிய மனு தாக்கல் செய்துள்ளார். அதில், போதை பொருள் விவகாரம் தொடர்பாக சோதனை செய்ய சந்தேக நபர்களின் ரத்த மாதிரி, முடி, நகம் ஆகியவற்றின் மாதிரிகளை வலுகட்டாயமாக கேட்டு பெறுவது அரசியல் சட்டத்தின் 20(3) பிரிவுக்கு முற்றிலும் எதிரானது. மேலும் நான் விசாரணைக்கு ஆஜராகும் போது என்னுடன் ஒரு வழக்கறிஞர் இருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.






அதே நேரத்தில், விசாரணைக்கு அழகு நடிகை சார்மி ஆஜராகும் போது, விசாரணை நடக்கும் அப்காரி பவன் கட்டடத்திற்கு இன்னும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பை சிறப்பு புலனாய்வு குழு கேட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


Find Out More:

Related Articles: