ஜிஎஸ்டி-கட்டணத்தையையும் மீறி வரவேற்பை பெற்ற படங்கள்

J Ancie


ஜிஎஸ்டியால் உயர்ந்த திரையரங்க  கட்டணங்களுக்கும் அமல்படுத்தப்பட்ட பிறகு கடந்த மூன்று வாரங்களாகவே நம்ம ஊர்  தியேட்டர்களுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. ஜுலை மாதம் 7ம் தேதி எந்தப் படங்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடதக்கது. ஆனால், 14ம் தேதி வெளியான படங்களுக்கு ஒரு பெரிய வரவேற்பு இல்லை. 21ம் தேதியும் ஏழு படங்கள் வரை வெளியானது. இந்தப் படங்களுக்கும் எப்படி வரவேற்பு இருக்குமோ என திரையுலக வட்டாரங்களில் ஒரு பெரிய கேள்வி இருந்தது.





ஆனால், வெளியான ஏழு படங்களில் 'விக்ரம் வேதா, மீசைய முறுக்கு' ஆகிய படங்கள் வாலிபர்களின் வரவேற்புடன் முதல் மூன்று நாட்களில் நல்ல வசூலைப் பெற்றதாக திரையுலக வட்டாரங்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றன. 'விக்ரம் வேதா' படத்தில் விஜய் சேதுபதி, மாதவன் ஆகியோரது நடிப்பு மிகவும்  ரசிகர்களை கவர்ந்துள்ளது. 'மீசைய முறுக்கு' படம் முற்றிலும் இளைஞர்களுக்கான துள்ளல் படமாகவே அமைந்துள்ளது.






இந்த இரண்டு படங்களும் ஜிஎஸ்டி வரி விதிப்பிற்குப் பிறகு அதிகமான தியேட்டர் டிக்கட் கட்டணங்களையும் மீறி மக்களை தூண்டி வர வழைத்துள்ளது திரையுலகத்தினரிடையே  பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நல்ல படங்களைக் கொடுத்தால் கட்டணத்தையும் மீறி மக்கள் வருவார்கள் என்பதை அவர்கள் மண்டைக்கு புரிய வைத்துள்ளது. அதை மற்றவர்களும் தொடர்ந்தால் மட்டுமே தொடர்ச்சியான நல்ல வரவேற்பு இருக்கும்.


Find Out More:

Related Articles: