
கால்ல சுளுக்கு... அதாங்க வரல!- இனியாவின் பதில் இது

அவர் கூறுகையில், "சில நாட்களுக்கு முன்பு கணுக்காலில் சுளுக்கு பெரிய ஏற்பட்டது. சரியாக நடக்க முடியவில்லை. இதனால் 10 நாட்கள் தொடர் ஓய்வு எடுக்கும்படி டாக்டர் கேட்டுக்கொண்டார்.அது மட்டுமில்லை இசை வெளியீட்டு விழாவுக்கு வாட்ஸ்அப் மெசேஜ் மட்டும்தான் பெயருக்கு வந்தது. அழைப்பிதழ் வரவில்லை.

காலில் பிரச்சினை இருப்பதால் விழாவுக்கு முந்தைய நாளே வர முடியாது என்று ஏற்கனவே படக்குழுவுக்குத் தெரிவித்தேன். என் காலை புகைப்படம் எடுத்தும் அவர்களுக்கு அனுப்பி வைத்தேன். போகக் கூடாது என்ற வஞ்ச எண்ணம் எதுவும் இல்லை. எனக்கு வருத்தம் இல்லை. இந்த சம்பவத்தால் என்னை யாரும் பொறுப்பு இல்லாதவர் என்று நினைக்க வேண்டாம்," என்றார்.