ஓவியாவை பிடிக்கும்... அதற்காக திருமணம் செய்து கொள்கிறேன்.... சொல்கிறார் சிம்பு
ஓவியாவை நான் காதலித்து திருமணம் செய்து கொள்வதாக வலைதளங்களில் வெளயிடுவது போல் எந்த ஒரு டுவீட்டும் என்னுடைய சொந்த டுவிட்டர் கணக்கில் இருந்து செல்லவில்லை என்று லிட்டில் சூப்பர் ஸ்டார் நடிகர் சிம்பு மறுப்பு தெரிவித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் வெற்றிகரமான பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து 3 அல்லது 4 வாரங்களாக அப்போட்டியின் சக போட்டியாளர்களால் ஓவியா தொடர்ந்து எலிமினேட் செய்யப்பட்டாலும் ஓவியாவைக் காப்பாற்றி பிக்பாஸ் வீட்டில் தக்கவைத்து கொள்ள மக்களும், ஓவியாவின் திவிர அன்பு ரசிகர்களும் அசராமல் வாக்களித்து வந்தனர்.
இது இயற்கையாகவே மற்ற போட்டியாளர்களுக்கு பொறாமையை தொடந்து ஏற்படுத்தியது. லிட்டில் சூப்பர் ஸ்டர் ஓவியாவை திருமணம் செய்ய விரும்புவதாக வலைதளங்களில் ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில் அதை நடிகர் சிம்பு மறுத்துள்ளார்.
மேலும் அப்படி டுவீடே தன்னுடைய சொந்த டுவிட்டர் கணக்கில் இருந்து செல்லவில்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.ஓவியா எப்படி இருக்கிறாரோ அவர் இயல்பு அது எனக்கு பிடித்திருக்கிறது. அவ்வளவுதான்.மிகத் தெளிவாக சொல்லிவிட்டேனா?" இது தான் சிம்பு தரப்பில் டுவீட் செய்யப்பட்டது.