முட்டாள்கள் பிதற்றுவார்கள், நாய்கள் குரைக்கும்: கமல் மேட்டரால் கடுப்பான கவுதமி

J Ancie


மீண்டும் கமல் ஹாஸனுடன் அன்பும் நெருக்கம் காட்டுகிறார் என்று கூறியவர்களுக்கு நடிகை கவுதமி ட்விட்டர் மூலம் சவுக்கடி கொடுத்துள்ளார். நடிகை கவுதமியும், உலக நாயகன் கமல் ஹாஸனும் திருமணம் செய்யாமலேயே கூடி 13 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்தனர்.  இப்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர். தனது மகள் சுப்புலட்சுமியின் நலன் கருதி இந்த முடிவை எடுத்ததாக நடிகை கவுதமி தெரிவித்தார்.

தனது மகள் சுப்புலட்சுமியை நடிகையாக்கி பார்க்க ஆசைப்படுகிறார் நம்ம கவுதமி. அதனால் அவர் அதற்கான வேலைகளில் ஈடுபட்டு மும்முரமாக வருகிறார் என்று கூறப்படுகிறது. கவுதமியும், கமலும் மீண்டும் ஒன்று சேர்ந்துவிட்டதாக நேற்று வெளியான தகவலை பார்த்து கவுதமி கடுப்பாகியுள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். முட்டாள்கள் பேசுவார்கள், நாய்கள் குரைக்கும். நான் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி சென்றுவிட்டேன். மற்றவர்களும் அவர்களின் வாழ்வை மட்டும் வாழ வேண்டும். ஏதாவது உருப்படியாக செய்ய வேண்டும் என்று ட்விட்டரில் கடுப்பாகி தெரிவித்துள்ளார் கவுதமி.



Find Out More:

Related Articles: