ஓவியா வந்துட்டாய்யா, திரும்பி வந்துட்டாய்யா: ரசிகர்கள் மகிழ்ச்சி

J Ancie

நடிகை ஓவியா ஒரு குட்டி பிரேக்கிற்கு  பிறகு அவர் மீண்டும் ட்விட்டரை பயன்படுத்த துவங்கியுள்ளார். நடிகை ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அவருக்கு ஏராளமான வெறியான ரசிகர்கள் கிடைத்துள்ளனர். இதன் மூலம் திரையுலகில் அவருக்கு மவுசு அதிகரித்துள்ளது.



மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் ஒரு வாய்ப்பு கிடைத்தும் அதை அவர் ஏற்கவில்லை.பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு ஓவியா முதல்முறையாக அவர் அக்கவுண்டில் ட்வீட்டியுள்ளார். இதை பார்த்துவிட்டு ஓவியா வந்துட்டாய்யா வந்துட்டாய்யா என்று அவரின் ரசிகர்கள் மிகவும் சந்தோஷப்பட்டுள்ளனர்.உங்களின் அன்பும், அக்கறையும் பற்றி விளக்க வார்த்தையே இல்லை. ஆசிர்வதிக்கப்பட்டவளாக நான் உணர்கிறேன். உங்களின் அன்பால் மேலும் பொறுப்பு அதிகரித்துள்ளது என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ஓவியா.


Find Out More:

Related Articles: