பிக் பாஸால் மிகவும் லேட்டாகும் ஓவியாவின்  படங்கள்

frame பிக் பாஸால் மிகவும் லேட்டாகும் ஓவியாவின் படங்கள்

J Ancie


பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் போடப்பட்டுள்ள ஒப்பந்தம் காரணமாக ஓவியாவின் படம் ரிலீஸாக சற்றே தாமதமாகிறதாம். தமிழ்த் திரையுலகால் கண்டுகொள்ளாமல் கைவிடப்பட்ட ஓவியா, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் செம பாபுலர் ஆக, இப்போது தமிழ் சினிமாவே ஓவியாவுக்காக தவமாய் ஏங்கி நிற்கிறது.

Image result for oviya


ஓவியாவுக்கு ஏற்பட்டுள்ள கிரேஸின் விளைவால் ஓவியா சப்பையாக துண்டு துக்கடா கேரக்டரில் நடித்த படங்கள், ஓவியா நடித்த படங்களின்  டப்பிங் வடிவம் ஆகியவைகளுக்கு இப்போ புது மவுசு வந்திருக்கிறது. ஓவியா நடிப்பில் உருவான சீனி என்ற ஒரு படம் பெயர் மாற்றப்பட்டு ஓவியாவ விட்டா யாரு? என்று சிக்கிரத்தில் வெளியாகவிருக்கிறது.

Image result for oviya


அதேபோல் பிருத்விராஜ், ஓவியா நடித்த மலையாள படம் போலீஸ் ராஜ்ஜியமாக இப்போ தமிழ் பேசவிருக்கிறது. இந்த படங்கள் எல்லாம் ஓவியாவுக்காக கிடப்பில் காத்திருக்கின்றன. ஓவியா புரமோஷனுக்கு வந்து படத்தைப் பற்றி பொன் வாய் திறந்து பேசினால் தான் புரமோஷனுக்கு உதவும். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி முடியும்வரை ஓவியா இதுபோன்ற எந்த பேட்டிகள் கொடுக்க கூடாது. எனவே பிக் பாஸின் உத்தரவுக்காக காத்திருக்கின்றன ஓவியாவின் சில்லரைப் படங்கள்.



Find Out More:

Related Articles: