
கருவில் நான்கு வயது சிறுமிக்கு அம்மாவாக சாய் பல்லவி!
இயக்குநர் விஜய் இயக்கத்தில் கதை நாயகியாக பிரேமம் சாய்பல்லவி நடிக்கும் கரு படத்தில் சாய் பல்லவி நான்கு வயது சிறுமிக்கு அம்மாவாக நடிக்கிறாராம். ப்ரேமம் மூலம் அறிமுகமாகி எல்லோரையும் பய்த்தியமாய் தேட வைத்தவர் சாய் பல்லவி. மேக்கப்பே இல்லாமல் இயல்பான அழகாக பரு முகத்துடன் அறிமுகமான கோவைப் பெண்ணை தென் இந்திய ஒரு கண் வைத்து ஹீரோக்களே தேடினார்கள்.

ஆனால் யாருக்கும் சிக்காத சாய் பல்லவி இப்போது ஹீரோயினுக்கு நல்ல முக்கியத்துவம் தரும் கரு என்ற படம் மூலம் தமிழுக்கு வருகிறார்.

இந்த கரு படத்தில்தான் நான்கு வயது சிறுமிக்கு அம்மாவாக,தாயாக நடிக்கிறாராம். அம்மா மகள் இடையே இருக்கும் பாசப் பிணைப்புகள் தான் படத்தின் மையக் கதையே. படப்பிடிப்பு முடிந்து டப்பிங் வேலைகள் மும்முரமாக போய்க்கொண்டிருக்கிறது.