மலர் டீச்சரை மதிக்காத அக்கட தேச ஹீரோ!

frame மலர் டீச்சரை மதிக்காத அக்கட தேச ஹீரோ!

SIBY HERALD
நடிகை சாய் பல்லவி, மலையாளத்தில் நடித்த ப்ரேமம் மற்றும் களி திரைப்படங்களை தொடர்ந்து ,தெலுங்கு திரையுலகிலும் கால் பதித்தார். இவர், தான் அறிமுகமான முதல் திரைப்படமான பிடா படத்தில் தனது இயல்பான துரு துரு நடிப்பாலும், அறிமுகப்படத்திலேயே கடினமான தெலங்கானா பாஷையில் சொந்தக்குரலில் செய்த நேர்த்தியான டப்பிங்காலும், அனைவரின் கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்றார். 



இதனை தொடர்ந்து நானியுடன் இவர் நடித்த எம். சி. ஏ படமும் மெகா வெற்றியாக, தெலுங்கு திரையுலகம் சாய் பல்லவியை கொண்டாட தொடங்கியது. ஆனாலும், மற்றொரு பக்கத்தில் சாய் பல்லவி மீது ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. சாய் பல்லவியின் அடுத்த திரைப்படம் ஏ. எல். விஜய் இயக்கியுள்ள கரு. தெலுங்கிலும் கணம் என்ற பெயரில் வெளிவரும் இத்திரைப்படத்தில் சாய் பல்லவியின் ஜோடியாக நடிப்பவர் நாகா சௌர்யா. இவர் சாய் பல்லவி படப்பிடிப்பின் போது திமிராக நடந்து கொண்டதாகவும் தனக்கு பிடிக்காத ஜோடி என்றால் அது சாய் பல்லவி தான் என்றும் பல பேட்டிகளில் குறிப்பிட்டபடி இருந்தார். 



சமீபத்தில் சென்னையில் நடந்த கரு திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் கூட நாக சௌர்யா கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று ஹைதராபாதில் நடைபெற்ற இத்திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பான கணம் திரைப்படத்தின் நிகழ்ச்சியிலும் சாய் பல்லவி வந்தும் நாகா சௌர்யா வராதது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. சாய் பல்லவி, சமீபத்திய பேட்டி ஒன்றில் நாக சௌர்யா கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்தும் அவரது மனம் புண்பட்டிருந்தால் மன்னித்துக்கொள்ளும்படியும் கூறியிருந்தும், நாகா சௌர்யா இன்றைய நிகழ்ச்சிக்கு வராதது இயக்குனர் விஜய் உட்பட அனைவரையும் வேதனைக்குள்ளாக்கியது. 




இந்நிலையில் இன்று நிகழ்ச்சிக்கு வந்த சாய் பல்லவி , ஹைதராபாத் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய நிலையில், காரில் சென்றால் நேரத்திற்கு நிகழ்ச்சி நடக்கும் அரங்கத்தை அடைய முடியாது என உணர்ந்து, தனது உதவியாளரின் பைக்கில் வந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. தெலுங்கில் இன்று முன்னணி ஹீரோயின் ஆன நிலையிலும், பைக்கில் எளிமையாக வந்த சாய் பல்லவியை கண்டு ஆச்சர்யப்பட்ட வண்ணம் நின்ற பத்திரிக்கையாளர்கள், சாய் பல்லவியை அவரது உதவியாளரோடு சேர்த்து பைக்கில் செல்ல பல புகைப்படங்களை க்ளிக்கித் தள்ளினர். பல தோல்வி படங்களுக்கு பின்னர், சமீபத்தில் சலோ என்ற வெற்றிப்படம் கொடுத்த நாக சௌர்யாவிற்கு, சாய் பல்லவியோடு உள்ள சண்டை இன்னும் தொடர்கின்றது என்பது, இன்றைய நிகழ்ச்சிக்கு அவர் வராததால் மேலும் தெளிவாக பதிவானது. 


Find Out More:

Related Articles: