கருத்து கனியுடன் மீண்டும் நாணி

SIBY HERALD
தெலுங்கு நடிகர் நாணி, தமிழில், நான் ஈ ,ஆஹா கல்யாணம், வெப்பம் போன்ற படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் அவர், சமீபத்தில் நடித்த படமான க்ரிஷ்ணார்ஜுன யுத்தம் படு தோல்வியடைந்தது. இதனை தொடர்ந்து அடுத்ததாக, நாகர்ஜூனாவுடன் ஒரு படத்தில் நடித்து வரும் நாணி, மீண்டும் தமிழ் சினிமாவை நோக்கி வரவிருக்கிறார். 



அப்பா மற்றும் தொண்டன் படங்களை தொடர்ந்து, சமுத்திரக்கனி இயக்கும் வேலன் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார் நாணி. இப்படத்தில் நானியுடன், அமலா பால், சரத்குமார் ,பார்வதி நாயர் மற்றும் நாசர் நடிக்கவுள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படடம் ,ஒரு ஆக்ஷன் த்ரில்லர் ஆகும்.



 இதில் ஆச்சர்யம் என்னவென்றால், இதே கூட்டணி தான் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஜெண்டப்பை காபிராஜு என்ற படத்தில் இணைந்து பணியாற்றியது (நிமிர்ந்து நில் படத்தின் தெலுங்கு பதிப்பு). ஏற்கனவே பிளாப் கொடுத்த அதிர்ச்சியில் இருக்கும் நாணி, தனக்கு இதற்கு முன்னர் மாபெரும் தோல்வி கொடுத்த கருத்துகளுக்கு பெயர் போன சமுத்திரக்கனியின் படத்தில் மீண்டும் இணைந்திருப்பது, ஆச்சர்யத்தை கொடுத்தாலும், இம்முறையாவது வெற்றி பெறுவாரா பார்ப்போம்.


Find Out More:

Related Articles: