மதுரைக்காரியின் பிகினி விருந்து

SIBY HERALD
ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர், மதுரை பெண்ணான நிவேதா பெத்துராஜ். அப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், அதில் வந்த அடியே அழகே என்ற ஒரே பாடலின் மூலம், கனவுக்கன்னி ஆனார் நிவேதா. இதனை தொடர்ந்து, தமிழில் உதயநிதி ஸ்டாலினுடன்  பொதுவாக எம்மனசு தங்கம் படத்திலும், தெலுங்கில் மெண்டல் மதிலோ என்ற படத்திலும் நிவேதா பெத்துராஜ் நடித்தார்.



ரசிகர்களை பெற்ற  போதிலும் இவரது எந்த படமும் வெற்றி பெறவில்லை என்பது, அவருக்கு வருத்தத்தை அளித்து கொண்டே இருந்தது. இந்நிலையில், நேற்று தொடங்கி ஒரு புகைப்படம் இன்டர்நெட்டில் வைரலாகி கொண்டிருக்கிறது. நீல நிற டூ பீஸ் பிகினி நீச்சல் உடையில், வெய்யில்காலத்தில் இன்னும் சூடேற்றும் விதமாக, நிவேதா பெத்துராஜ் பீச்சில் அமர்ந்து போஸ் கொடுக்கும் புகைப்படம் தான் அது. 




பலரும் அது நிவேதா பெத்துராஜ் தான் என்று கூறி வந்தாலும், ஒரு சிலர், அது நிவேதா அல்ல, வேறு யாரோ ஒரு மாடல் என்றும் கூறுகின்றனர். ஒரு தரப்பினர், இப்புகைப்படம் திரைப்படங்களுக்கு நடிக்க வரும் முன்னர் நிவேதா பெத்துராஜ் எடுத்த ஒரு போட்டோஷூட்டில் எடுத்தது  தான் இப்புகைப்படம், என்றும் கூறி வருகின்றனர். இதே போலவே சில மாதங்களுக்கு முன்னர், நிவேதா படு கவர்ச்சியாக ஷாட்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் ப்ரா அணிந்த வண்ணம் கிக் பாக்சிங் செய்வது போல புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பியது குறிப்பிடத்தக்கது. எது எப்படியோ, எப்படி இருந்தாலும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி படத்தில் நிவேதா பெத்துராஜ் கண்டிப்பாக பிகினி விருந்து படைப்பார் என தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.



Find Out More:

Related Articles: