கல்யாணம் பண்ணிக்கலாமா? சீண்டி விளையாடும் த்ரிஷா

frame கல்யாணம் பண்ணிக்கலாமா? சீண்டி விளையாடும் த்ரிஷா

SIBY HERALD
நடிகை த்ரிஷா, இன்று தனது முப்பத்தி ஐந்தாவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில், தனது பிறந்தநாளை முன்னிட்டு தனது ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக, தனது டுவிட்டர் பக்கத்தில் "ஆஸ்க் டி" (#AskT) என்ற ஹாஷ்டாகோடு ரசிகர்கள் தன்னிடம் கேள்விகள் கேட்கலாம் என்று கூறி ட்வீட் போட்டிருந்தார். 


Image result for arya and trisha


இதனை தொடர்ந்து பல ரசிகர்களும், பல கேள்விகள் கேட்டு வந்தனர். அதில் ஒரு ரசிகர், யாரும் எதிர்பாராத வண்ணம் த்ரிஷாவிடம், "நீங்கள் ஏன் நடிகர் ஆர்யாவை கல்யாணம் செய்து கொள்ள கூடாது? நீங்கள் இருவரும் ஒரு சிறந்த ஜோடி, நீங்கள் இருவரும் வாழ்வில் இணைந்தால், நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்" என்று கூறியிருந்தார். 



இதற்கு பதிலளித்த த்ரிஷா, ஆர்யாவை டேக் செய்து "சிரித்தே சாகிறேன்" என்று பதிவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து அந்த டுவீட்டை குறிப்பிட்ட ஆர்யா, த்ரிஷாவை நோக்கி விளையாட்டாக, "கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா? இல்ல ஓடி போயி கல்யாணம் தான் கட்டிக்கலாமா?" என்று ட்வீட் போட்டு கலாய்த்திருந்தார். சர்வம் படத்தில் ஏற்கெனவே ஜோடியாக நடித்த த்ரிஷாவும் ஆர்யாவும், நிஜ வாழ்க்கையில் ஜோடி ஆகி விடுவார்களோ என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். 


Find Out More:

Related Articles: