மரியான், உத்தம வில்லன், சென்னையில் ஒரு நாள் போன்ற தமிழ் படங்களிலும், என்னு நிண்டே மொய்தீன், சார்லி ,டேக் ஆப் போன்ற பல மலையாள படங்களிலும் நடித்து புகழ் பெற்றவர் பார்வதி. சமீபத்தில் இவர் பயணித்த வண்டி ஒன்று, ஆக்சிடென்ட் ஆனதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பார்வதி சில நாட்களுக்கு முன்பு கொச்சியிலிருந்து திருவனந்தபுரத்திற்கு வாடகை காரில் சென்று கொண்டிருந்த போது, அந்த கார் ஆலப்புழா அருகே, வேகமாக சென்ற மற்றொரு கார் மீது பயங்கரமாக மோதியது. அதிர்ஷ்டவசமாக பார்வதிக்கு எதுவும் ஆகவில்லை, மற்ற காரில் வந்தவர்களும் பெரிதாக காயங்கள் ஏதும் இன்றி தப்பினர்.
இதன் பின்னர் பார்வதி வேறு ஒரு காரில் ஏறி பயணத்தை தொடர்ந்தார். இந்த ஆக்சிடென்ட் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட இரு கார் ஓட்டுநர்களும் தங்களுக்குள் பேசி சமரசம் செய்து ஒரு முடிவுக்கு வந்து விட்டபடியால், போலீஸ் வழக்கு ஒன்றும் பதியப்படவில்லை. ஒரு வாரத்துக்கு முன் தான் பார்வதி, இந்த ஆண்டு டேக் ஆப் படத்துக்காக தனக்கு வழங்கப்பட்ட தேசிய விருதை வாங்காமல், விழாவை புறக்கணித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.