நடிக்கவே வாய்ப்பில்லை நடிகையா நடிக்கணுமாம்

SIBY HERALD
நடிகை தமன்னா கடைசியாக தமிழில் ஸ்கெட்ச் படத்தில் சீயான் விக்ரம் ஜோடியாக நடித்தார். பொங்கல் தினத்தன்று வெளியான இத்திரைப்படம் படு தோல்வி அடைந்தது. இந்நிலையில் கைவசம் வேறு ஏதும் படங்கள் இல்லாமல் இருந்த தமன்னா, சமீபத்தில் சில தெலுங்கு படங்களில் தனது ரேஞ்சை விட கம்மியான சில சிறு ஹீரோக்களுடன் நடித்து வருகிறார்.



 கல்யாண் ராம் நடிக்கும் நா நுவ்வே ,சந்தீப் கிஷன் நடிக்கும் படம் மற்றும் தமிழில் உதயநிதி ஸ்டாலின்  நடிக்கும் கண்ணே கலைமான் என சிறிய படங்களை மட்டுமே கைவசம் வைத்திருக்கும் தமன்னா சமீபத்தில் தனது பேராசையை வெளிப்படுத்தியுள்ளார். அது என்ன என்றால் அவர் இரண்டு பேரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படங்களில் நடிக்க விருப்பப்படுகிறாராம். 



அவர்கள் ஸ்ரீதேவி மற்றும் சானியா மிர்சாவும். இவர் கூறியதை கேட்டதும் நமக்கு தோன்றுவது என்னவென்றால், நடிக்க வந்து பாத்து வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் நடிப்பே வராத இவருக்கு,  நடிகையாக நடிக்க வேண்டும் என்ற பேராசை எதற்கு என்று தான். சமீபத்தில் கீர்த்தி சுரேஷ், நடிகை சாவித்ரியாக நடித்து வெற்றி பெற்றதை கண்டு, தானும் அப்படி செய்ய வேண்டும் என்று கூறியதே இக்கருத்து. 


Find Out More:

Related Articles: