பிளாப் நாயகியோடு சேரும் சூர்யா

SIBY HERALD
நடிகர் சூரியா தானா சேர்ந்த கூட்டம் படத்தை அடுத்து, செல்வராகவன் இயக்கத்தில், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சாய் பல்லவி ஜோடியாக என்ஜிகே படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து லைக்காவின் தயாரிப்பில் இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனது முப்பத்தி ஏழாவது படத்தில் நடிக்கவுள்ளார்.



 அயன் , மாற்றான் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைகிறார்கள் சூரியா மற்றும் கே.வி.ஆனந்த். முதலில் இந்த படத்தில் நடிக்கவைக்க காஜல் அகர்வாலுடன் பேச்சு வார்த்தை நடப்பதாக செய்திகள் பரவின. 



ஆனால் இப்பொழுது என்ன சொல்ல படுகின்றது என்றால் வனமகன் படத்தில் அறிமுகமான சாயீஷா தான் இந்த படத்தில் சூர்யாவின் ஜோடியாம். இப்படத்தில் இவர்களை தவிர மோகன்லால் மற்றும் அல்லு சிரிஷ் நடிக்கின்றனர். இந்த படம் போக சாயீஷா, கார்த்தி நடிக்கும் கடைக்குட்டி சிங்கம் மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் ஜூங்கா படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். 


Find Out More:

Related Articles: