முன்னாள் நடிகையின் சூப்பர் கம்பேக்

SIBY HERALD
நடிகை ஈஸ்வரி ராவ் தன இளம் வயதில் நாளைய தீர்ப்பு மற்றும் ராமன் அப்துல்லா போன்ற படங்களில் நடித்தவர் ஆவார். இதன் பின்னர் குறு பார்வை சிம்மராசி போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தவர் அதன் பின்னர் கவர்ச்சி நடிப்பு செட்டாகாமல் சினிமாவிலிருந்து சீரியலுக்கு தாவினார்.



கோகிலா எங்கே போகிறாள் போன்ற சில சீரியல்களிலும் நடித்தார். சில ஆண்டுகள் கழித்து மீண்டும் சினிமாவில் சுள்ளான் மற்றும் சரவணா போன்ற படங்களில் அக்கா அண்ணி போன்ற வேடங்களில் அவ்வப்போது தலைகாட்டி வந்தார். இந்நிலையில் இன்று வெளியாகி உள்ள காலா படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஜோடியாக செல்வி என்ற கதாபாத்திரத்தில் வெளுத்து கட்டி உள்ளார் ஈஸ்வரி.



முதலில் இந்த படத்தில் நடிக்க அழைத்த பொழுது அவரை ரஜினிக்கு தாயாக நடிக்க அழைக்கிறார்கள் என்றே நினைத்து வேண்டாம் என்று சொல்ல நினைத்தாராம் ஈஸ்வரி. ஆனால் ரஞ்சித் நீங்கள் தான் ரஜினிக்கு ஜோடி என்றதும் ஆச்சரியப்பட்டு நடிக்க வந்தவர் இன்று சிறப்பாக நடித்து நல்ல பெயர் வாங்கி உள்ளார். இவர் நடித்த சுள்ளான் படத்தில் இவருக்கு தம்பியாக நடித்த தனுஷ் ஒரு காட்சியில் நீ என்ன தலைவருக்கா ஜோடியாக போற என்பார் அதற்கு ஏற்றார் போல இன்று தலைவர் ரஜினிக்கே ஜோடியாக நடித்து பட்டையை கிளப்பி உள்ளார் ஈஸ்வரி. 


Find Out More:

Related Articles: