அத்தையாக மாறும் சிவகாமி

SIBY HERALD
ராஜமவுலி இயக்கத்தில் ராஜமாதா சிவகாமி தேவியாக நடித்ததால் அனைவராலும் பாராட்ட பட்டவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். ரஜினிகாந்த் நடித்த படையப்பா படம் வெளியாகி பல ஆண்டுகள் கழித்து அதில் நடித்த நீலாம்பரி வேடத்தை விட இப்படம் இவருக்கு பெரும் புகழை தந்தது.



இந்நிலையில் அடுத்ததாக ரம்யா கிருஷ்ணன் நடிகர் நாக சைதன்யா நடிக்கும் சைலஜா ரெட்டி அல்லுடு என்ற படத்தில் அவருக்கு அத்தையாக நடிக்க உள்ளார். இந்த படத்தில் நாகா சைதன்யா ஜோடியாக அணு இம்மானுவேல் நடிக்க அவரின் தாயாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்.




நாக சைதன்யா மற்றும் ரம்யா கிருஷ்ணன் இடையே வரும் மோதல் காட்சிகள் மாப்பிள்ளை படத்துக்கு நிகராக இருக்கும் என்று கூற படுகிறது. இந்நிலையில் இன்று முதல் ரம்யா கிருஷ்ணன் இந்த படத்தில் நடிக்க துவங்கி உள்ளார். 


Find Out More:

Related Articles: