இடுப்பழகிக்கு கிடைத்த வாய்ப்பு

SIBY HERALD
தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களாக முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ஷ்ரியா சரண். இவர் இரண்டு மாதங்களுக்கு முன்னர் யாருமே எதிர்பாராத வண்ணம் திடீரென தனது நீண்ட நாள் காதலரை ரகசிய திருமணம் செய்து கொண்டார்.



இவரது திருமணத்தை தொடர்ந்து இவர் நடிப்பதாக இருந்த ஒன்றிரங்கு படங்களில் இருந்து கூட இவர் விலக்கப்பட்டார். துரதிர்ஷ்டம் என்னவென்றால் இவர் நடிப்பதாக இருந்த தேஜாவின் ஆட்டா நாதே வெட்டா நாதே படம் மொத்தமாக கைவிடப்பட்டது. இவர் நடித்து முடித்து பல மாதங்களாக ரிலீசுக்கு காத்திருக்கும் தமிழ் படமான நரகாசூரன் படமோ எப்பொழுது வெளியாகும் என்றே தெரியாத நிலையில் உள்ளது.



இந்த நிலையில் தான் ஷ்ரியாவுக்கு புதிதாக ஒரு பட வாய்ப்பு அமைந்துள்ளது. அறிமுக இயக்குனர் சுஜானா இயக்கும் இந்த படத்தில் ஷ்ரியாவுடன் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தின் கதாநாயகி நிஹாரிகா கோனிடேலா நடிக்க உள்ளார். இந்த படத்தை ஒளிப்பதிவாளர் ஞானசேகர் தயாரிக்க உள்ளார். பார்க்கலாம் இந்த படமாவது ஷ்ரியாவின் கேரியரை காப்பாற்றுமா என்று. 


Find Out More:

Related Articles: