காதலருக்கு நயனின் பரிசு

frame காதலருக்கு நயனின் பரிசு

SIBY HERALD
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மிகவும் பிசியாக கோலமாவு கோகிலா, கொலையுதிர் காலம் ,சார்ஜுன் இயக்கவுள்ள புதிய பேய் படம் என பல படங்களில் நடித்து வருகிறார். நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலில் இருப்பது அனைவரும் அறிந்ததே. போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிய விக்னேஷ் சிவன், அடுத்ததாக நானும் ரவுடி தான் படத்தை விஜய் சேதுபதி - நயன்தாராவை வைத்து இயக்கினார்.

Image result for nayantara apherald


இந்த படத்தின் போது தான் நயனுக்கு விக்கிக்கு காதல் மலர்ந்தது. இந்த ஜோடி விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே விக்னேஷ் சிவன், தானா சேர்ந்த கூட்டம் படத்தை அடுத்ததாக ஒரு படத்தில் தானே ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் அந்த படத்தை நயன் தயாரித்து விக்கிக்கு ஜோடியாகவும் நடிப்பார் என்றும் வதந்திகள் பரவி வந்தன.

Image result for nayantara apherald


ஆனால் மேட்டர் என்ன என்றால் நயன்தாரா அடுத்ததாக ஒரு படத்தை தயாரிக்க, அதை விக்னேஷ் இயக்க அதில் அதர்வா நாயகனாக நடிக்க உள்ளாராம். அந்த படத்தில் நயன் அதர்வாவின் ஜோடியாக நடிக்கலாம். இந்த படத்தை இதயம் முரளி என்று பெயரிட யோசித்து வருகிறார்கள். நயனும் அதர்வாவும் ஏற்கனவே இமைக்கா நொடிகள் படத்தில் அக்கா தம்பியாக நடித்துள்ளனர். 


Find Out More:

Related Articles: