மீண்டும் மஹேஷுடன் பிரகாஷ்ராஜ்

frame மீண்டும் மஹேஷுடன் பிரகாஷ்ராஜ்

SIBY HERALD
தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு இப்பொழுது தான் பரத் அனே நேனு என்ற அரசியல் திரைப்படத்தின் மூலம் ஒரு சூப்பரான காம்பேக் கொடுத்தார். இதற்கு முன்னர் இவர் நடித்த இரண்டு படங்களான ஸ்பைடர் மற்றும் பிரம்மோத்சவம் ஆகிய படங்கள் இரண்டும் படு தோல்வி அடைந்து இவரது சூப்பர்ஸ்டார் நாற்காலியை ஆட்டம் கொள்ள செய்த படங்கள் ஆகும். பரத் படத்தில் மகேஷ் ஒரு இளம் முதல் அமைச்சர் ஆகவும் அவரது காட்சியிலேயே இருந்து அவருக்கு எதிராக காய் நகர்த்தும் வில்லனாக ப்ரகாஷ் ராஜும் நடித்திருந்தனர்.

Image result for mahesh babu and prakash raj


இப்பொழுது டேராடூனில் மகேஷ் பாபு தனது இருபத்தி ஐந்தாம் படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக உள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் மகேஷ் பாபுவின் தந்தையாக நடிக்க மீண்டும் பிரகாஷ்ராஜை அணுகியுள்ளனர் பட குழுவினர். பிரகாஷ்ராஜ் ஏற்கனவே மகேஷ் பாபுவின் வில்லனாக ஒக்கடு, சைனிக்குடு, காலேஜா ஆகிய படங்களிலும், மகேஷின் தந்தையாக சீதம்மா வாகிட்லோ சிறிமலே சேட்டு மற்றும் தூக்குடு ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

Image result for mahesh babu and prakash raj


இவர் மஹேஷுக்கு மிகவும் லக்கியானவர் என்று அனைவரும் நம்புகின்றனர். ஏற்கனவே மகேஷின் இருபத்தி ஐந்தாவது படத்தை இயக்கம் வம்ஷி பைடிப்பள்ளியின் படங்களான தோழா, முன்னா மற்றும் பிருந்தாவனம் படங்களிலும் பிரகாஷ் ராஜ் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


Find Out More:

Related Articles: