மீண்டும் படுதோல்வி- நொந்த நிவேதா

frame மீண்டும் படுதோல்வி- நொந்த நிவேதா

SIBY HERALD
நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழில் ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர். இப்படத்தில் வந்த பாடலான அடியே அழகே பாடல் தான் இன்று வரை இவரது விசிட்டிங் கார்டாக இருந்து வருகிறது. ஏன் என்றால் இதனை தொடர்ந்து இவர் நடித்த படமான பொதுவாக எம்மனசு தங்கம் படமும் படு தோல்வியை தழுவியது. தமிழில் இருந்து தெலுங்குக்கு தாவினார் நிவேதா.

Image result for nivetha pethuraj hot


அங்கும் இவர் நடித்த முதல் படமான மெண்டல் மதிலோ படம் நல்ல விமர்சனங்களை பெற்றாலும் கூட தோல்வி அடைந்தது. இதனால் தெலுங்கிலும் நிவேதாவிற்கு வாய்ப்புகள் எதுவும் அமையாமல் அதோடு அவரது டோலிவுட் கனவுகளும் முடிந்தன. இதனை தொடர்ந்து தமிழில் நிவேதா பெத்துராஜ் நடித்து நீண்ட காலமாக திரைக்கு வராமல் இழுத்து கொண்டிருந்த படமான டிக் டிக் டிக் இன்று வெளியாகியுள்ளது.

Image result for nivetha pethuraj hot


இந்தியாவின் முதல் ஸ்பேஸ் படம் என்று விளம்பரம் செய்யப்பட்ட இந்த படத்தில் நிவேதா ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார். சக்தி சௌந்தரராஜன் இயக்கியுள்ள இந்த படத்தில் படு கவர்ச்சியான அவதாரத்தில் நீச்சல் உடையில் எல்லாம் தோன்றி நிவேதா கலக்கியிருந்தாலும் படம் மிகவும் சிறு பிள்ளைத்தனமாக உள்ளதாகவும் காதில் பூந்தோட்டமே வைப்பது போல ஒரு திரைக்கதை உள்ளதாகவும் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருவதால் பீதியில் உள்ளார் நிவேதா.

Image result for nivetha pethuraj hot



இந்த படமும் தோல்வி அடைந்து விட்டதால் இதற்கு அடுத்து விஜய் ஆன்டனியுடன் நடிக்கும் திமிரு புடிச்சவன், பிரபு தேவாவுடன் நடிக்கும் காக்கி, மற்றும் துல்கர் சல்மானுடன் நடிக்கும் வான், ஆகிய மூன்று படங்களை தான் பெரிதும் நம்பி உள்ளார் நிவேதா பெத்துராஜ். 


Find Out More:

Related Articles: