
திருமணமா, தயக்கமா- குழப்பும் அனுஷ்கா!

சமீபத்தில் வெளியாகி வசூலை வாரி இறைத்த பாகமதி படம் கூட அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. ஆனால் அனுஷ்காவால் இஞ்சி இடுப்பழகி படத்திற்காக ஏற்றிய எடையை இன்று வரை இறக்க முடியவில்லை. இதனால் பல இயக்குனர்கள் அனுஷ்காவை நடிக்க வைக்க முயற்சி எடுப்பதில்லை. மேலும் பாகமதி படத்தை தொடர்ந்து அனுஷ்கா அமர்நாத் பத்ரிநாத் என ஆன்மீக பயணம் மேற்கொண்டு விட்டது மட்டுமின்றி அவருக்கு வந்த ஐந்து பெரிய பட வாய்ப்புகளையும் மறுத்து மிராகரித்து விட்டார்.

இவரது இந்த செய்கையால் ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். அனுஷ்கா சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டு திருமணத்திற்கு தயாராகி விட்டாரா இல்லை அவருக்கு வரும் படங்களின் கதைகள் சரியாக இல்லாததால் அவர் படம் எதுவும் ஒப்புக்கொள்ளாமல் இருக்கிறாரா என்று ரசிகர்கள் கடுப்பில் உள்ளார்கள். அனுஷ்கா தான் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும்.