விசுவாசத்தில் இணைந்த விவேக்!

frame விசுவாசத்தில் இணைந்த விவேக்!

SIBY HERALD
தல அஜித்குமார் இப்பொழுது இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் உருவாகி வரும் கிராமத்து மாஸ் படமான விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் அஜித்தின் ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். பில்லா, ஏகன், மற்றும் ஆரம்பம் படங்களை தொடர்ந்து இப்படத்தில் அஜித்துடன் நயன் நான்காவது முறையாக ஜோடி சேர உள்ளார்.

Image result for ajith and vivek


இந்த படம் அஜித் மற்றும் சிவா காம்பினேஷனுக்கும் வீரம், வேதாளம் ,மற்றும் விவேகம் படங்களை தொடர்ந்து நான்காவது படம் ஆகும். இந்த படத்தில் அஜித் அன்னன் தம்பி என இரு வேடங்களில் தொடன்கிற உள்ளதாக கூறப்படுகிறது. விஸ்வாசம் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் சென்ற மாதம் நடந்து முடிந்தது. இதனை தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு மும்பை மற்றும் சென்னையில் நடைபெறும் என்றும் இதில் அஜித் புதிய கெட்டப்பில் தோன்றுவார் என்றும் சொல்ல படுகிறது.

Image result for ajith and vivek


இந்நிலையில் இந்த படத்தில் காமெடி நடிகர் விவேக் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று அறிவிக்க பட்டுள்ளது. ஏற்கனவே அஜித் மற்றும் விவேக் இருவரும் இணைந்து பூவெல்லாம் உன் வாசம், காதல் மன்னன், வாலி, மற்றும் கடைசியாக என்னை அறிந்தால் ஆகிய படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். விஸ்வாசம் படத்தில் ஏற்கனவே யோகி பாபு, தம்பி ராமையா, மற்றும் ரோபோ ஷங்கர் நடிக்க உள்ளதாலும், இப்பொழுது விவேக்கும் இணைந்துள்ளதால் இந்த படத்தில் காமெடி பட்டையை கிளப்பும் என்று எதிர்பார்க்க படுகிறது. 


Find Out More:

Related Articles: