கலெக்டரிலிருந்து டாக்டராகும் நயன்தாரா

frame கலெக்டரிலிருந்து டாக்டராகும் நயன்தாரா

SIBY HERALD
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா சமீப காலமாக சிறப்பான கதாபாத்திரங்களாக தேர்ந்தெடுத்து தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். சென்ற ஆண்டு அறம் படத்தில் துணிச்சலான கலெக்டர் மதிவதனி என்ற கதாபாத்திரத்தில் நடித்த நயன்தாரா அடுத்ததாக சிவகார்த்திகேயனின் படமான வேலைக்காரனில் ஒரு சமூக ஆர்வலராக நடித்திருந்தார்.

Image result for nayantara apherald


தற்பொழுது கோலமாவு கோகிலா படத்தில் ஒரு மிடில் க்ளாஸ் குடும்பத்தை சேர்ந்த பெண்ணாகவும், இமைக்கா நொடிகள் படத்தில் ஒரு குற்ற புலனாய்வு அதிகாரியாகவும் நடித்து கலக்கி வரும் நயன்தாரா அடுத்ததாக தல அஜித்தின் விஸ்வாசம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இந்த படம் நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் சிவா இணையும் நான்காவது படமாகும். வீரம், வேதாளம், மற்றும் விவேகம் ஆகிய படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக இணையும் இந்த வெற்றி கூட்டணியின் விசுவாசம் படத்தை சத்யஜோதி நிறுவனத்தார் தயாரிக்கின்றனர்.

Related image


இந்த படத்தில் நயன்தாரா ஒரு டாக்டராக நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே தலையுடன் பில்லா படத்தில் கேங்ஸ்டராகவும், ஏகன் படத்தில் டீச்சராகவும், ஆரம்பம் படத்தில் அஜித்தின் ஆபரேஷனில் உதவும் பார்ட்னராகவும் நடித்திருந்த நயன்தாரா இம்முறை ஒரு மருத்துவராக வருகிறார். விஸ்வாசம் அடுத்த ஆண்டு பொங்கல் சிறப்பு வெளியீடாக வர உள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது. 


Find Out More:

Related Articles: