ஜோதிகாவை புகழும் லட்சுமி!

frame ஜோதிகாவை புகழும் லட்சுமி!

SIBY HERALD
தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு. இவர் தெலுங்கில் சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் பல வெப் சீரீஸ்களிலும் தொலைக்காட்சியில் மேமு சைதம் என்ற நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் அவர் தற்பொழுது ஜோதிகா நடிக்கும் படமான காற்றின் மொழி படத்தில் நடித்து வருகிறார்.

Image result for jyothika apherald


ஏற்கனவே இவர் தமிழில் மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் நடித்துள்ளார். காற்றின் மொழி படத்தில் ஜோதிகாவுடன் நடித்து வரும் அனுபவத்தை பற்றி கூறியுள்ளார். அதில் அவர் ஜோதிகாவுடன் நடிப்பது மிகவும் இனிமையான அனுபவம் என்றும் ஜோதிகாவின் கண்களே கதைகள் பல பேசும் கேமரா அவரை காதலிக்கும் என்றும் கூறியுள்ளார்.

Image result for jyothika apherald


ராதா மோகன் இயக்கும் காற்றின் மொழி படத்தில் ஜோதிகா வானொலியில் பாடி பிரபலம் ஆகும் ஒரு குடும்ப தலைவியாகவும் லட்சுமி மஞ்சு வானொலி நிலையத்தின் தலைவியாகவும் நடித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது. 


Find Out More:

Related Articles: