எனக்கும் அவருக்கும் சண்டையா?

SIBY HERALD
நடிகை அனுபமா பரமேஸ்வரன் மலையாள படமான ப்ரேமம் படத்தில் அறிமுகம் ஆனார். அதன் பின்னர் அவர் தெலுங்கு திரை உலகில் நுழைந்தார். அங்கும் அவர் ப்ரேமம், அ ஆ மற்றும் சதமானம் பவதி ஆகிய சூப்பர்ஹிட் படங்களில் நடித்தார். இதன் பின்னர் இவர் நடித்த உன்னதி ஒக்கட்டே சிந்தகி மற்றும் க்ரிஷ்ணார்ஜுன யுத்தம் ஆகிய படங்கள் படு தோல்வியை அடைந்தன.



இவர் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த படமான இவரது சமீபத்திய ரிலீசான தேஜ் ஐ லவ் யூ படமும் படு தோல்வியை தழுவியுள்ளது. இந்நிலையில் அவர் அடுத்ததாக நடித்து வரும் படமான ஹலோ குரு பிரேமா கோசமே படத்தின் பட பிடிப்பின் போது அனுபமாவுக்கும் ப்ரகாஷிராஜுக்கும் சண்டை வந்து ஷூட்டிங் கேன்சல் ஆனதாக செய்திகள் பரவின.



ஆனால் இன்று அனுபமா பரமேஸ்வரன் ப்ரகாஷ்ராஜுடன் இனைந்து சந்தோஷமாக இருக்கும் ஒரு புகைப்படத்தை தனது சமூக வலைதள அக்கவுண்டில் பதிவேற்றி இருவருக்கும் சண்டை இல்ல எல்லாமே வதந்தி என்று நிரூபித்துள்ளார். 


Find Out More:

Related Articles: