மீண்டும் ஜோதிகாவுடன் சிம்பு!

frame மீண்டும் ஜோதிகாவுடன் சிம்பு!

SIBY HERALD
சர்ச்சை நாயகன் சிம்பு அன்பானவன் அசரதவன் அடங்காதவன் படத்தின் படு தோல்வியை தொடர்ந்து தான் திருந்தி விட்டதாக கூறி வருகிறார். மணிரத்னம் இயக்கி உள்ள படமான செக்க சிவந்த படத்தின் பட பிடிப்புக்கு நேரத்துக்கு வந்ததோடு மட்டும் அல்லாமல் தனது எல்லா காட்சிகளையும் நடித்து கொடுத்ததும் முடித்து விட்டார்.



இதனை தொடர்ந்து இப்பொழுது அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கும் ஒரு படத்திலும் கார்த்திக் நரேன் இயக்க உள்ள ஒரு படத்திலும் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இந்நிலையில் சிம்பு சமீபத்தில் நடிகை ஜோதிகா தனது மொழி இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் நடித்து வரும் காற்றின் மொழி படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ளார்.



ஹிந்தி படமான தும்மரி சுலு படத்தின் ரீமேக்கான இந்த காற்றின் மொழி படத்தில் சிம்பு ஆயுஷ்மன் குரானா நடித்த வேடத்தில் நடித்துள்ளார். சிம்பு ஏற்கனவே ஜோதிகா உடன் மன்மதன் மற்றும் சரவணா படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Find Out More:

Related Articles: