இறுதிக்கட்டத்தில் பாயும் தோட்டா

frame இறுதிக்கட்டத்தில் பாயும் தோட்டா

SIBY HERALD
நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்ககத்தில் நீண்ட நாட்களாக நடித்து வரும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இந்த படத்தில் தனுஷ் மற்றும் மேகா ஆகாஷ் ஜோடியாக நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குனர் கவுதம் கடந்த இரண்டு ஆண்டுகளாக எடுத்து வருகிறார்.

Image result for Dhanush ENPT


இந்நிலையில் சமீபத்தில் ஒரு போஸ்ட் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் கவுதம் பதிவிட்டார். அது என்ன என்றால் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கி விட்டது என்றும் படத்தின் புதிய டைட்டில் லோகோ வரும் வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்படும் என்றும் அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் தான் இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமார் கலந்து கொண்டுள்ளார்.

Related image


இந்த படத்தில் வழக்கமாக கிராமத்து கதாநாயகனாக நடிக்கும் சசிகுமார் ஒரு நகரத்து இளைஞனாக நடித்துள்ளார். தனுஷின் அண்ணனாக சசிகுமார் இந்த படத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் ஆக்டொபர் மாதம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கவுதம் மேனனின் மற்றொரு படமான சீயான் விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் படம் நவம்பரில் வெளியாகலாம்  என்று கூறப்படுகிறது. 


Find Out More:

Related Articles: