
ஆவியாக காம்பேக் கொடுத்த நஸ்ரியா!

மேலும் தமிழிலும் நேரம் மற்றும் ராஜா ராணி படத்தில் நடித்த நஸ்ரியா யாரும் எதிர்பாராத விதமாக திடீரென நடிகர் பஹத் பாசிலை கல்யாணம் செய்து கொண்டு திரைப்படங்களில் இருந்து விலகினார். இந்நிலையில் சமீபத்தில் வெளியான கூடே படத்தின் மூலமாக நடிப்புக்கு காம்பேக் கொடுத்தார் நஸ்ரியா. இந்த படத்தில் இவர் நடிகர் ப்ரித்விராஜின் தங்கையாக நடித்திருந்தார்.

இறந்து போன பின்னர் ஒரு ஆவியாக அண்ணன் பிரித்விராஜ் கண்ணுக்கு மட்டும் தெரியும் அன்பு தங்கையாக அவருக்கு உதவி செய்யும் வேடத்தில் நஸ்ரியா நடித்திருந்தார். இந்த படம் இதோடு வெளியான படமான மோகன்லால் நடித்த நீராளி படத்தை தோல்வி அடைய செய்து பிளாக்பஸ்டர் ஆக ஓடி கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து பல படங்களில் நடிக்க நஸ்ரியாவுக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.