மீண்டும் வல்லவன் டைப் படத்தில் நயன்தாரா?

frame மீண்டும் வல்லவன் டைப் படத்தில் நயன்தாரா?

SIBY HERALD
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா கடைசியாக தமிழில் அறம் மற்றும் வேலைக்காரன் படங்களில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் மாபெரும் வெற்றியை பெற்றன. இது மட்டுமல்லாமல் தெலுங்கில் இவர் நடித்த படமான ஜெய் சிம்ஹா படமும் பாலகிருஷ்ணாவுக்கு ஒரு காம்பேக் படமாக அமைந்தது.

Image result for nayantara apherald


இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடித்த புதிய நியமம் படத்தை தொடர்ந்து மீண்டும் நயன்தாரா தனது தாய் மொழியான மலையாளத்தில் நடிக்க உள்ளார். நடிகர் மற்றும் இயக்குனர் ஆன ஸ்ரீனிவாசன் அவர்களின் இளைய மகனான தியான் ஸ்ரீனிவாசன் இயக்குனராக அறிமுகம் ஆக உள்ள இந்த படம் லவ் ஆக்ஷன் டிராமா என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் நயன்தாரா நிவின் பாலி ஜோடியாக நடிக்க உள்ளார்.

Image result for nayantara apherald


பல ஆண்டுகளுக்கு முன்னர் நயன்தாரா சிம்புவுடன் நடித்த வல்லவன் படத்தில் தன்னை விட வயது கம்மியான சிம்புவை காதலிப்பது போல கதை இருக்கும். அதே போல தான் இந்த படத்தில் தன்னை விட வயது குறைந்த நிவினை காதலித்து நயன்தாரா ஜெயிப்பதே கதை என்று கூறப்படுகிறது. 


Find Out More:

Related Articles: