மறுபடியும் பிளாப்பா- அலறும் சாயிஷா!

frame மறுபடியும் பிளாப்பா- அலறும் சாயிஷா!

SIBY HERALD
நடிகை சாயிஷா தெலுங்கில் அகில் படம் மூலமாக அறிமுகம் ஆனார். இந்த படம் படு தோல்வியை அடைந்தது. இதன் பின்னர் இவர் நடித்த முதல் ஹிந்தி படமான ஷிவாய் படமும் ஓடவில்லை. விஜய் இயக்கத்தில் தமிழில் ஜெயம் ரவி நடித்த வனமகன் படத்தில் அறிமுகம் ஆனார்.

Image result for sayyeshaa apherald


இவரது நேரமோ என்னமோ இந்த படம் கூட வெற்றி பெறவில்லை. இதனை அடுத்து ஒரு ஆண்டு கழித்து மீண்டும் தமிழில் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்தார். இந்த படம் ஓரளவுக்கு வெற்றி தான் என்றாலும் சாயிஷா படத்தில் பொருந்தவே இல்லை என்று விமர்சனங்களை பெற்றார். இந்நிலையில் அடுத்ததாக இவர் நடித்து போன வாரம் விஜய் சேதுபதி தயாரித்த ஜூங்கா படம் வெளியானது. முழுக்க நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று இந்த படமும் தோல்வியை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது.

Image result for sayyeshaa apherald


நேற்று இவர் நடித்த அடுத்த படமான ஆர்யாவின் கஜினிகாந்த் வெளியானது. இந்த படம் தெலுங்கில் வெற்றியை பெற்ற ஒரு படத்தின் ரீமேக்காகும் ஆனாலும் தமிழில் சுத்தமாக செட் ஆகவில்லை. அடுத்தடுத்து பிளாப் படங்களில் மட்டுமே நடித்து வரும் சாயிஷா வெறும் டான்ஸ்க்கு மட்டும் பெயர் வாங்கியுள்ளார். அடுத்ததாக சூர்யாவுடன் நடிக்க உள்ள சாயிஷா அந்த படத்தை தான் மிகவும் நம்பியுள்ளார். 


Find Out More:

Related Articles: