ஆகஸ்டில் முதல் பார்வை!

frame ஆகஸ்டில் முதல் பார்வை!

SIBY HERALD
நடிகை சமந்தா தனது திருமணத்துக்கு பின்னர் நடித்த படங்கள் அத்தனையும் பிளாக்பஸ்டர். தெலுங்கில் ராமச்சரன் ஜோடியாக கிராமத்து பெண்ணாக நடித்த ரங்கஸ்தலம் ஆகட்டும் எண்பதுகளில் வாழ்ந்த பத்திரிகையாளராக நடித்த மஹானடி படம் ஆகட்டும் மனோதத்துவ நிபுணராக நடித்த இரும்புத்திரை படம் ஆகட்டும் சமந்தா பல வேடங்களில் நடித்து கலக்கியுள்ளார்.

Image result for samantha apherald


இந்நிலையில் அடுத்ததாக செப்டம்பரில் ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியாக உள்ளது. சிவ கார்த்திகேயன் ஜோடியாக நடித்துள்ள சீமராஜா மற்றும் பவன் குமார் இயக்கிய யூ டர்ன் தான் அந்த இரண்டு படங்கள்.

Image result for samantha apherald


இதில் யூ டர்ன் படத்தின் ட்ரைலர் ஆகஸ்டு பதினேழாம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் சமந்தா ரச்சனா என்ற பத்திரிகையாளராக ஒரு அமானுஷ்யமான தொடர் கொலைகளை துப்பறியும் பெண்ணாக நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் செப்டம்பர் பதிமூன்றாம் தேதி வெளியாக உள்ளன. 


Find Out More:

Related Articles: